• அறிவே ஆயுதம்

அந்தக் காலத்தில் போர்க் கருவிகள் ஆயுதமாக இருந்தன. இப்போது புத்தகம் தரும் அறிவே ஆயுதமாக உள்ளதாக பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் கூறினார். 
சென்னை புத்தகக் கண்காட்சியில் வியாழக்கிழமை நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் நூல் ஆயுதம் என்ற தலைப்பில் அவர் பேசியது: 
நமது கடவுள்களுக்கு ஆயுதங்கள் உள்ளன. ஆயுதங்களுடன் போரிட்டு மக்களைக் காத்த நம் முன்னோர்களையும் கடவுளாக வணங்குகிறோம். வீரம் என்றாலே அது ஆயுதங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஆயுதம் என்பது ஒரு கருவிதான். அதனால்தான் நாம் செய்யும் தொழில்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை எல்லாம் வைத்து ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்.
தமிழ் உயிர் எழுத்தில் ஆயுத எழுத்துக்குக் கடைசி இடம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது காலத்தின் ஆயுதம் அறிவு. அந்த அறிவைத் தருபவை புத்தகங்கள். நாம் வில்லும் அம்பும் எடுத்துப் போர் புரியத் தேவையில்லை. அறிவை ஆயுதமாகக் கொண்டு நமது பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கு புத்தகங்கள் உதவும் என்றார். 
இந்தக் கூட்டத்தில் வெற்றிப்படிகள் என்ற தலைப்பில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பேசினார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha

அறிவே ஆயுதம்

  • Product Code: Books
  • Availability: 1
  • Rs.150

  • Ex Tax: Rs.150

Tags: அறிவே ஆயுதம் arive aayudham motivational book