• விளக்குகள் பல தந்த ஒளி

Author : Lillian Eichler Watson


விளக்குகள் பல தந்த ஒளி

லில்லியன் எயிஷ்லர் வாட்சன்;

தமிழில்: பி. உதயகுமார்;  

பக்.398;

ரூ.230;  

கண்ணதாசன் பதிப்பகம்தமிழில் ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள் வந்துள்ளன. இருப்பினும், அவை அனைத்திலிருந்தும் வித்தியாசமான நூலாக இது விளங்குகிறது.  உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய "லைட் ஃப்ரம் மெனி லேம்ப்ஸ்' என்ற புகழ்பெற்ற நூலின் தமிழாக்கம்தான் இது. பக்கத்துக்கு பக்கம் அறிவுரைகளை அள்ளித் தெளித்து வாசகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தாமல்,  புகழ்பெற்ற சாதனையாளர்களின் மேற்கோள்களையும், அவை உதயமானதன் பின்னணி சம்பவங்களையும் தொகுத்து அளித்திருப்பது இதன் தனிச் சிறப்பு.வாழ்க்கைப் பயணத்தில், வெவ்வேறு அனுபவங்களையும், சிரமங்களையும் எதிர்கொள்ளும்போது, அந்தச் சூழல்களைக் கடப்பதற்கான நம்பிக்கையைத் தரும் பல்வேறு விஷயங்கள் நூலில் பொதிந்துள்ளன. விளிம்பு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி உச்ச நிலையைத் தொட்ட பலரின் அனுபவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் தொடங்கி ரூஸ்வெல்ட் வரை சர்வதேசப் பிரபலங்களின் கூற்றுகளாலும், தத்துவார்த்த சிந்தனைகளாலும் நிரம்பியிருக்கும் இந்நூல், வாசிப்பவர்களின் மனதில்  தன்னம்பிக்கை துளிர்விட நீர்வார்க்கும் என்பது திண்ணம்.  


Contact for buy: 044 - 22673839, 7338763242

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good
Captcha

விளக்குகள் பல தந்த ஒளி

  • Product Code: Book
  • Availability: 1
  • Rs.230

  • Ex Tax: Rs.230